இந்தியாவில் உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடர் இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தத் தொடரில் தமிழ்நாடு அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்தத் தொடரில் பங்கேற்கவிருக்கும் 21 வீரர்கள் கொண்ட தமிழ்நாடு உத்தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், இந்திய அணியின் முன்னணி வீரராக திகழும் அஸ்வின், முரளி விஜய் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அதேபோல், உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த விஜய் சங்கர், டி20 போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளராக இருக்கும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது பெயரும் இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல், டிஎன்பிஎல் தொடரில் திண்டுக்கல் அணிக்காக அசத்திய ஹரி நிஷாந்துக்கும் இம்முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.