தமிழ்நாடு

tamil nadu

ஆசியக் கோப்பை நடத்துவது தொடர்பான முடிவை தள்ளிவைத்தது ஏசிசி!

By

Published : Jun 10, 2020, 4:32 PM IST

கரோனா வைரஸ் தொற்றுநோயைக் கவனித்து ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்துவது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகள் கூட்டம் முடிவு செய்துள்ளது.

asian-cricket-council-defers-decision-on-asia-cup-2020
asian-cricket-council-defers-decision-on-asia-cup-2020

கரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், டி20 உலக கோப்பை தொடரை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.

இந்நிலையில் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் நிர்வாகிகள் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் கரோனா வைரஸின் தாக்கங்களை பொறுத்தே ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுமென முடிவுசெய்யபப்பட்டுள்ளது.

இது குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக, 2020ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளை நடத்த தற்போது தகுந்த சூழ்நிலை அமையவில்லை. இதனால் இப்பெருந்தொற்றின் தாக்கத்தை கணக்கில் கொண்டு போட்டிகளை நடத்த தேதிகள் மற்றும் இடங்கள் தேர்வு செய்யப்படும்.

அதேசமயம் ஏசிசியின் முக்கிய தொடராக ஆசிய கோப்பை இருப்பதால், அதனை ஒத்திவைக்கும் முடிவும் தற்போது இல்லை. அதனால் இத்தொடரை நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் ஏசிசி மேற்கொண்டு வருகிறது" என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏசிசி தலைவர் நஸ்முல் ஹசன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பிசிசி-யின் சார்பாக தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் ஜேய் ஷா ஆகியோர் முதல்முறையாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details