தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

உலக லெவன் அணிக்கு எதிரான டி20 போட்டியில் கோலி விளையாடுவது சந்தேகம்?

கோலி தலைமையிலான ஆசிய லெவன் அணிக்கும் - டூ பிலெசிஸ் தலைமையிலான உலக லெவன் அணிக்கும் இடையிலான இரு டி20 போட்டிகள் அடங்கிய தொடர் வரும் மார்ச் 18ஆம் தேதி தொடங்குகிறது.

Asia XI vs World XI: Kohli, Faf headline squads for twin T20s
Asia XI vs World XI: Kohli, Faf headline squads for twin T20s

By

Published : Feb 25, 2020, 8:27 PM IST

வங்கதேச நாட்டின் தந்தை என்றழைக்கப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மான்னின் 100ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஆசிய லெவன், உலக லெவன் அணிகளுக்கு இடையிலான இரு டி20 போட்டிகளை நடத்துவதாக அறிவித்துள்ளது.

மேலும் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி வருகிற மார்ச் 18ஆம் தேதியும், இரண்டாவது போட்டி மார்ச் 21ஆம் தேதியும், வங்கதேசத்தில் நடத்தவுள்ளதாக, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

இதனையடுத்து பிசிபியின் வேண்டுகோளை ஏற்ற பிசிசிஐயின் தலைவர் சவுரவ் கங்குலி, இந்திய அணியின் விராட் கோலி, ஷிகர் தவான், முகமது ஷமி, குல்தீப் யாதவை விளையாட அனுமதிப்பதாக தெரிவித்திருந்தார். மேலும் அந்தப்பட்டியலில் கூடுதல் வீரர்களாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர்களான கே.எல். ராகுல், ரிஷப் பந்தின் பெயர்களையும் இணைத்து அனுப்பினார்.

இந்நிலையில் இத்தொடரின் முதல் போட்டி நடக்கும் மார்ச் 18ஆம் தேதி, இந்திய அணி, தென் ஆப்பிரிக்கா அணியுடனான தொடரின் ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளது. இதனால் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, கே.எல். ராகுல் விளையாடுவது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஆசிய லெவன் அணியின் கேப்டனாகவும் செயல்படுகிறார் என்பதினால், இதனை எவ்வாறு சரிகட்டுவது என பிசிபி சிக்கலில் தவித்து வருகிறது.

ஆசிய லெவன்: விராட் கோலி (கே), கே.எல். ராகுல், ரிஷப் பந்த், முகமது ஷமி, ஷிகர் தவான், தமிம் இக்பால், லிட்டன் தாஸ், முஸ்பிகூர் ரஹிம், திசாரா பெரேரா, ரஷித் கான், முஸ்தபிசூர் ரஹ்மான், சந்தீப் லமிசானே, லசித் மலிங்கா, முஜிப் உர் ரஹ்மான்.

(இதன் முதல் போட்டியில் இந்தியாவின் விராட் கோலி, கே.எல். ராகுல் விளையாடுவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை)

ஆசிய லெவன்:பாப் டூ பிலெசிஸ் (கே), அலெக்ஸ் ஹேல்ஸ், கிறிஸ் கெய்ல், நிக்கோலஸ் பூரான், ராஸ் டெய்லர், ஜானி பேர்ஸ்டோ. கீரன் பொல்லார்ட், அடில் ரஷித், ஷெல்டன் காட்ரோல், லுங்கி நிகிடி, ஆண்ட்ரூ டை, மிட்செல் மெக்லெனகன்.

மேலும் இந்த ஆசிய லெவன் அணியில் எந்தவொரு பாகிஸ்தான் அணி வீரரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:15 மாதங்களுக்கு பின் டெஸ்ட் போட்டியில் முதல் வெற்றியைப் பதிவுசெய்த வங்கதேசம்!

ABOUT THE AUTHOR

...view details