இந்திய கிரிக்கெட் அணி வீரர் புஜாரா இன்று (ஜன.25) தனது 33ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு சக வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் நடத்து முடிந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் 928 பந்துகளை எதிர்கொண்ட புஜாரா 3 அரைசதங்களுடன் 271 ரன்கள் எடுத்தார். இவருக்கு பந்து வீசிய பவுலர்கள் பலரும் சோர்வடையும் அளவுக்கு புஜாராவின் இன்னிங்ஸ் இருந்தது.
ஸ்பின் பவுலிங்கை ஏறி வந்து அடித்தால் பாதி மீசையை எடுத்துக்கொள்கிறேன் - புஜாராவிற்கு அஸ்வின் சவால்! - இந்திய கிரிக்கெட் அணி வீரர் புஜாரா
இங்கிலாந்து தொடரில் சுழற்பந்து வீச்சாளர்களின் பந்தை, புஜாரா கீரிஸை விட்டு ஏறி வந்து அடித்தால், நான் என்னுடைய மீசையை பாதியாக எடுத்துவிட்டு விளையாடுகிறேன் என்று புஜாராவிற்கு அஸ்வின் சாவல் விடுத்துள்ளார்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் யூ-டியூப் சேனல் ஒன்றில் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் உடன் கலந்துரையாடியுள்ளார். அப்போது பேசிய அஸ்வின், வர இருக்கின்ற இங்கிலாந்து தொடரில் மொயின் அலி அல்லது வேறு எந்த சுழற்பந்து வீச்சாளரின் பந்தையாவது புஜாரா கீரிஸை விட்டு ஏறி வந்து அடித்தால், நான் என்னுடைய மீசையை பாதியாக எடுத்துவிட்டு விளையாடுகிறேன் என்று புஜாராவிற்கு விளையாட்டாக சவால் விடுத்துள்ளார்.
இதற்கு காரணம் புஜாரா பெரும்பாலும் ஸ்பின்னர்களை எதிர்கொள்ளும்போது கீரிஸை விட்டு ஏறி வந்து ஆடமாட்டார். இதன் காரணமாகவே புஜாராவை கிண்டல் செய்யும் விதமாக அஸ்வின் இவ்வாறு கூறியிருக்கிறார்.