இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை பிரிஸ்பேனில் தொடங்கவுள்ளது. இப்போட்டியில் பங்கேற்பதன் மூலம் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன், தனது 100ஆவது சர்வதேச டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ளார்.
இந்நிலையில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச டெஸ்டில் 700 முதல் 800 விக்கெட்டுகளை எடுக்க வாய்ப்புள்ளதாகவும், ஆனால் நாதன் லயனால் அதனை எட்டுவது கடினம் என்றும் இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய முரளிதரன், "அஸ்வின் ஒரு சிறந்த பந்து வீச்சாளர் என்பதால் அவருக்கு சர்வதேச டெஸ்டில் 700 முதல் 800 விக்கெட்டுகளை எடுக்க ஒரு வாய்ப்பு உள்ளது. தற்போதுள்ள கிரிக்கெட்டில் வேறு எவரும் அதனை எட்டமுடியுமா என்பது சந்தேகம்தான்.