இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நரேந்திர மோடி விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடியது.
இதையடுத்து முதல் நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாகவே இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இன்னிங்ஸை நிறைவு செய்தது. இதில் அக்சர் பட்டேல் 6 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இப்போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 599 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.