தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பயிற்சியாளரை விமர்சித்ததால் அணியிலிருந்து நீக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர்! - பெங்கால் அணியின் பந்துவீச்சி பயிற்சியாளர் ரனதேப் போஸ்

ரஞ்சி கோப்பை முதல் தர டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் பெங்கால் வீரர் அசோக் டிண்டா, அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரை  தவறாக விமர்சித்ததால் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Ashok Dinda axed from Bengal Ranji squad
Ashok Dinda axed from Bengal Ranji squad

By

Published : Dec 25, 2019, 4:48 PM IST

இந்தியாவில் ரஞ்சி கோப்பை முதல் தர டெஸ்ட் போட்டி பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான பெங்கால் அணியில் வேகப்பந்து வீச்சாளர் அசோக் டிண்டா விளையாடிவருகிறார்.

இத்தொடரின் மூன்றாம் சுற்று ஆட்டங்கள் இன்று முதல் தொடங்கிய நிலையில், பெங்கால் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ரனதேப் போஸ் பற்றி, அணி கேப்டனிடம் தவறான முறையில் விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பெங்கால் அணியில் வேகப்பந்துவீச்சாளர் அசோக் டிண்டா

இது குறித்து அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் அருண் லால் கூறுகையில், ”டிண்டா பயிற்சியாளரை தரைக்குறைவாக விமர்சித்த காரணத்தால் பெங்கால் கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளது. ஏனேனில் சிஏபி, டிண்டாவிடம் மன்னிப்பு கேட்குமாறு கூறியும் அவர் மறுத்துவிட்ட காரணத்தால் இந்த முடிவை எடுத்துள்ளது. ஆனால் இன்றைய போட்டியில் அவரைப் போன்ற மூத்த வீரர்களின் பங்கு இன்றியமையாததாக இருக்கும் என நான் எதிர்பார்த்தேன். ஆனால் சிஏபியின் இந்த முடிவு சரியானது என்பதால் என்னால் எதுவும் செய்ய இயலவில்லை” என்றார்.

இதையும் படிங்க:இரு பெரும் மாற்றங்களுடன் களமிறங்கும் நியூசிலாந்து!

ABOUT THE AUTHOR

...view details