வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்றுவருகிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலியா அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
ஆஷஸ் டெஸ்டிலிருந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளர் விலகல்! - icc
லண்டன்: இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் முழங்காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பின் காரணமாக இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில், இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி வருகிற 14ஆம் தேதி லண்டனில் நடைபெறவுள்ளது. இதற்கான பயிற்சியின்போது இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு முழங்காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது.
இதனால் ஆண்டர்சன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லபட்டர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு முழங்காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக அவரால் கிரிக்கெட்டில் போட்டிகளில் விளையாட முடியாது, அவருக்கு தற்போது ஓய்வுத் தேவை என அறிவுறுத்தினர். இதனால் இங்கிலாந்து-ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.