தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இந்தியாவின் தற்போதைய சூழலை முன்பே கணித்த ஆர்ச்சர்!

இங்கிலாந்தின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரின் பழைய ட்விட்டர் பதிவுகள், நிகழ்காலத்தில் நடப்பதைக் குறிப்பதாக பலரும் விமர்சித்துள்ளனர்.

Archer's soothsaying tweets resurface amid COVID-19 lockdown
Archer's soothsaying tweets resurface amid COVID-19 lockdown

By

Published : Mar 25, 2020, 11:52 PM IST

கோவிட்-19 பெருந்தொற்றின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜோஃப்ரா ஆர்ச்சர், கடந்த 2017ஆம் ஆண்டு பதிவிட்ட ட்விட்டர் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வரைலாகி வருகிறது.

ஆர்ச்சரின் ட்விட்டர் பதிவில், “ மூன்று வாரங்கள் வீட்டிலிருந்தால் போதாது” என்று பதிவிட்டிருந்தார். இதனையடுத்து நேற்று பிரதமர் மோடியும் மக்களை 21 நாட்கள், அதாவது மூன்று வாரங்கள் ஊரடங்கு உத்தரவைப் பின்பற்றுமாறு உத்தரவிட்டிருந்தார்.

அதேபோல் ஆர்ச்சர் 2013ஆம் ஆண்டு பதிவிட்டிருந்த ட்விட்டர் பதிவில், ‘கெட்டது உருவாக இரண்டு நிமிடங்கள் தான் ஆகும், ஆனால் அதிலிருந்து விடுபட மூன்று வாரங்கள் தேவைப்படும்’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அவர் கூறியது போலவே கரோனா வைரஸின் தாக்கம் மூன்று வாரங்களில் குணமடைய வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது.

கடந்த காலத்தில் ஆர்ச்சர் பதிவிட்ட ட்விட்டர் பதிவுகள், தற்போது நிகழ்காலத்தில் கணக்கட்சிதமாக பொருந்தியுள்ளதால், பலரும் ஆர்ச்சரை ஒரு 'தீர்க்கதரிசி' என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:கரோனா :ஹர்பஜன் சிங்கின் குட்டி ஸ்டோரி...!

ABOUT THE AUTHOR

...view details