இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தினால் அந்த அணிக்கான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான ஒப்பந்தப் பட்டியல் அதிகாரப் பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டது. இதில் 10 டெஸ்ட் அணிக்கான ஒப்பந்தங்களும், 12 டி20 மற்றும் ஒருநாள் அணிக்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
இதில் குறிப்பிடத்தக்க வகையில் அந்த அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஜோஃப்ரா ஆர்ச்சர் முதல் முறையாக இங்கிலாந்து அணியின் மூன்று வகையிலான போட்டிகளுக்கும் ஒப்பந்தமாகியுள்ளார்.
இதையும் படிங்க...!ஆஷஸ் கிரிக்கெட்: ஆர்ச்சரை எங்கேயோ கொண்டுபோயிடுச்சுல்ல! #ICCRankings
இந்த ஒப்பந்தத்தில் இங்கிலாந்து அணியின் சீனியர் வீரர்களான அலேக்ஸ் ஹேல்ஸ், டேவிட் வில்லி, லியம் ஃப்ளங்கட் ஆகியோர் எந்தவித ஒப்பந்தத்திலும் கையெழுத்தாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த ஒப்பந்தமானது வருகிற அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் ஓராண்டுகளுக்கு பின்பற்றப்படும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.