தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஆர்ச்சர், ஸ்டோக்ஸுக்கு தெ.ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒய்வு! - england south africa series

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர், டி-20 தொடருக்கான அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

england south africa series cricket team
ஆர்ச்சர், ஸ்டோர்க்ஸ் ஆகியோருக்கு தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒய்வு

By

Published : Nov 3, 2020, 8:56 PM IST

லண்டன்: தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் இங்கிலாந்து அணி, தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கு எதிராக மூன்று டி-20களிலும், மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விளையாடவுள்ளது. இதில், விளையாட உள்ளவர்களின் பட்டியலை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, ஒருநாள் தொடரில் ஜோஃப்ரா ஆர்ச்சர், ஸ்டோக்ஸ் ஆகியோருக்கு ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

டி-20 தொடருக்கான அணி:மோர்கன் (அணித் தலைவர்), ஜானி பேர்ஸ்டோவ், ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), டேவிட் மாலன், பென் ஸ்டோக்ஸ், சாம் பில்லிங்ஸ், மொயின் அலி, சாம் கர்ரன், டாம் கர்ரன் ஜோஃப்ரா ஆர்ச்சர், கிறிஸ் ஜோர்டான், ரீஸ் டோப்லி, மார்க் வூட், ஆதில் ரஷீத்.

ஒருநாள் தொடருக்கான அணி: மோர்கன் (அணித் தலைவர்), ஜானி பேர்ஸ்டோவ், ஜேசன் ராய், ஜோ ரூட், லியாம் லிவிங்ஸ்டன், சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), மொயின் அலி, லூயிஸ் கிரிகோரி, டாம் கர்ரன், கிரிஸ் வோக்ஸ், ஆதில் ரஷீத், ரீஸ் டோப்லி, ஓலி ஸ்டோன், மார்க் வுட்

முதல் டி-20 பேட்டி நவம்பர் 27ஆம் தேதி கேப்டவுனிலுள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரண்டாவது, மூன்றாவது டி-20 போட்டிகள் முறையே நவம்பர் 29, டிசம்பர் 1ஆம் தேதி நடைபெறவுள்ளன. ஒருநாள் பேட்டி டிசம்பர் 4ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

இதையும் படிங்க:ஜீரோ டூ ஹீரோ: ஐபிஎல் 2020இல் ஸ்பார்க் அதிகமாக தென்பட்ட இளம் வீரர்கள்

ABOUT THE AUTHOR

...view details