தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மீண்டும் மீண்டும் நிற அடிப்படையில் துன்புறுத்தப்படும் ஆர்ச்சர்! - இங்கிலாந்து வீரர் ஆர்ச்சர்

சமூக வலைதளங்களில் தனக்கு நிற அடிப்படையிலான பிரச்னைகள் தினமும் வருவதாக இங்கிலாந்து அணியின் இளம் வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் தெரிவித்துள்ளார்.

archer-gets-racially-abused-on-social-media-calls-for-action
archer-gets-racially-abused-on-social-media-calls-for-action

By

Published : Mar 17, 2020, 2:44 PM IST

இங்கிலாந்து அணி உலகக் கோப்பை வெல்வதற்கு முக்கிய காரணமாக விளங்கியவர் இளம் வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர். ஜனவரி மாதம் முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வில் இருக்கிறார். சமூக வலைதளங்களை தொடர்ந்து தீவிரமாக பயன்படுத்தும் கிரிக்கெட் வீரர்களில் முக்கியமானவர் ஆர்ச்சர்.

ஆனால் சமீபத்தில் ஆர்ச்சருக்கு இன்ஸ்டாகிராமில் வந்த குறுஞ்செய்தியில் அவரை நிற அடிப்படையில் பேசியிருந்தது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து அவர், ''இதுபோன்ற கருத்துக்களுக்கு நான் பலமுறை எதிர்வினையாற்றியுள்ளேன். ஒவ்வொரு நாளும் எதிர்வினையாற்றுவது வழக்கமாகியுள்ளது. இது எப்போதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. உங்கள் கருத்தில் சரியான புரிதலுடன் உரையாட வேண்டும்.

இதுபோன்ற நிற அடிப்படையிலான கருத்துகளை எப்படி இன்னொருவரிடம் சுதந்திரமாக அனைவரும் கூறுகிறார்கள் என்பதுதான் எனக்கு புரியவில்லை. இதுபோன்ற கருத்துகளை எப்போதும் என்னை பலம் இழக்க செய்கிறது'' என பதிவிட்டார்.

.

இதையும் படிங்க:ஆர்ச்சரின் நிறத்தை கேலி செய்த இங்கிலாந்து ரசிகர்?

ABOUT THE AUTHOR

...view details