அசாம், பிகார் மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதுவரை அம்மாநிலத்தில் 56 லட்சத்து 71 ஆயிரத்து 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 5,305 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
அசாம், பிகார் மாநிலங்களுக்கு விராட்-அனுஷ்கா நிதியுதவி
மும்பை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம், பிகார் மாநிலங்களுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, அவரது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா ஆகியோர் நிதியுதவி வழங்கியுள்ளனர்.
அதேபோல் பிகாரில் 38 லட்சத்து 47 ஆயிரத்து 531 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 25 ஆயிரத்து 116 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அசாம், பிகார் மாநிலங்களுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, அவரது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா ஆகியோர் நிதியுதவி வழங்கியுள்ளனர். மேலும் அந்த மாநிலங்களில் உள்ள மக்களுக்கு நிதியுதவி செய்து உதவுமாறு கோரிக்கையும் வைத்துள்ளனர்.
இதுகுறித்து விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ”நம்நாடு கரோனா வைரசுக்கு எதிராகப் போராடி வரும் சூழலில், அசாம் பிகாரில் ஏற்பட்ட வெள்ளத்தால் பலரும் தங்களது உயிர்களை இழந்துள்ளனர். அவர்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறோம்” என குறிப்பிட்டிருந்தார்.