சர்வதேசக் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சையமான ஜோடிகளின் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி - அனுஷ்கா சர்மா ஆகியோரின் பெயர் எப்போதும் முன்னிலையில் இருக்கும். இவர்கள் இருவரும் 2017ஆம் ஆண்டு இத்தாலியில் பிரம்மாண்டமாகத் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் தற்போது அனுஷ்கா சர்மா கருவுற்றுள்ளார்.
மேலும் ஜனவரியில் அனுஷ்காவுக்கு குழந்தைப் பிறக்கவுள்ளதால் தான் அப்போது அவருடன் இருக்க வேண்டும் என்பதற்காக, இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரின் கடைசி மூன்று ஆட்டங்களில் இருந்து இந்தியக் கேப்டன் விராட் கோலி விடுப்பு எடுத்துள்ளார்.
இந்நிலையில் தனது கர்ப்ப காலத்தில் அனுஷ்கா சர்மா தலைகீழாக நின்றபடி சிரசாசனம் எனும் கடினமான யோகாப்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். அவருக்கு பயிற்சியாளராக விராட் கோலியும் உதவிவருகிறார். இதுகுறித்து அனுஷ்கா சர்மா வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.