தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

யுவராஜ் சிங்கின் சேலஞ்சை மாற்றியமைத்த கும்ப்ளே! - யுவராஜ் சிங்கின் சேலஞ்ச்

இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் விடுத்த சவாலை ஏற்று முன்னாள் பந்துவீச்சு ஜாம்பவான் அனில் கும்ப்ளே வெளியிட்டுள்ள காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Anil Kumble takes up Yuvraj Singh's 'keep it up' challenge
Anil Kumble takes up Yuvraj Singh's 'keep it up' challenge

By

Published : May 20, 2020, 12:06 AM IST

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, பொதுமக்கள் அனைவரும் தங்களது வீட்டிலேயே இருந்து வருகின்றனர். இதனால் விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் சமூக வலைதளங்களில், தங்களது நேரத்தைக் கழித்து வருகின்றனர்.

அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், 'பந்தை தொடர்ச்சியாக அடித்துக் கொண்டிருப்பது' போன்ற காணொலி ஒன்றை வெளியிட்டார். மேலும் அக்காணொலியுடன், 'இப்படித்தான் வீட்டிலிருந்து கரோனாவுடன் போராடுவதாகவும், இந்தச் சவாலை சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மா, ஹர்பஜன் சிங் ஆகியோர் ஏற்றுக்கொண்டு செய்து முடிக்க வேண்டும்” என்றும் யுவராஜ் சிங் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இவரின் சவாலை செய்த ஹர்பஜன் சிங், அதனை அனில் கும்ப்ளே, சவுரவ் கங்குலி, ஷிகர் தவானுக்கு பரிந்துரை செய்தார். இவரின் சவாலை ஏற்றுக்கொண்ட அனில் கும்ப்ளே, தனது ட்விட்டர் பக்கத்தில் அச்சவாலை செய்வது போன்ற காணொலியையும் வெளியிட்டுள்ளார்.

கும்ப்ளேவின் ட்விட்டர் பதிவில், தனது கையால் பந்தை விடாமல் அடித்து, அதனை இந்திய அணியின் விவிஎஸ்.லக்ஷ்மண், சேவாக், கே.எல். ராகுல் ஆகியோரை செய்யும் படி பரிந்துரைத்துள்ளார்.

தற்போது யுவராஜ் சிங்கின் சவாலை கும்ப்ளே வித்தியாசமான முறையில் செய்துள்ள காணொலி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:உடல்பயிற்சியில் தீவிரம் காட்டும் இந்திய வீரர்கள்...!

ABOUT THE AUTHOR

...view details