கரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் தொடங்கும் போது கடைபிடிக்க வேண்டிய புதிய விதிகளை அனில் கும்ப்ளே தலைமையிலான ஐசிசி கிரிக்கெட் கமிட்டி குழு பரிந்துரைத்தது. அதில், பந்துகளில் உமிழ்நீர் பயன்படுத்துவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது. அதேபோல, போட்டிகளின் போது உள்ளூர் நடுவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
இதுமட்டுமின்றி அனைத்து விதமான போட்டிகளிலும் இரு அணிகளுக்கும் கூடுதலாக ஒரு டிஆர்எஸ் ( நடுவரின் தீர்ப்பை சரிபார்க்கும் முறை) வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. தற்போது டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் இரு அணிகளும் தலா இரண்டு டிஆர்எஸ் முறையும், ஒருநாள், டி20 போட்டிகளில் தலா ஒரு டிஆர்எஸ் முறையும் பயன்படுத்த முடியும்.
இந்நிலையில், அனைத்து விதமான போட்டிகளில் டிஆர்எஸ் வாய்ப்புகள் அதிகம் வழங்கியதற்கான காரணம் குறித்து ஐசிசி கிரிக்கெட் கமிட்டி தலைவர் அனில் கும்ப்ளே விளக்கமளித்துள்ளார்.