டி10 லீக் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்றுவருகிறது. இதில் வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் ஆண்ட்ரே ரஸல், டேரன் சமி தலைமையிலான நார்த்தன் வாரியர்ஸ் அணிக்காக விளையாடிவருகிறார்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற 21 ஆவது லீக் ஆட்டத்தில் நார்த்தன் வாரியர்ஸ் அணி, டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வாரியர்ஸ் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அப்போது நான்காவது வீரராக களமிறங்கிய ஆண்ட்ரே ரஸல் வழக்கம்போல் தனது அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்த முற்பட்டார். அப்போது போட்டியின் ஆறாவது ஓவரை வீசிய ஆப்கானிஸ்தானின் 19 வயது இளைஞர் கைஸ் அகமது, ரஸ்ஸலுக்கு அதிர்ச்சியளிக்கும் விதத்தில் பவுன்சர் ஒன்றை வீசி அவரை தடுமாறி கீழே விழ செய்தார்.
கிரிக்கெட்டில் பவுன்சர் என்பது சகஜமான விஷயேமே. ஆனால் இந்த பவுன்சரை வீசியவர் வேகப்பந்துவீச்சாளர் அல்ல. மாற்றாக கைஸ் அகமது ஒரு சுழற்பந்துவீச்சாளர். அவர் பந்துவீசும்போது ரஸல் தலைகவசம்கூட அணியாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இதையும் படிங்க: மன அழுத்தத்தால் மற்றொரு ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் தற்காலிக ஓய்வு!