இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்குவதாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து செல்லவிருக்கும் பாகிஸ்தான் அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது அமீர், நடுவரிசை பேட்ஸ்மேனான ஹரிஸ் சோஹைல் ஆகியோர் தங்களது தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலிருந்து வெளியேறிய பாகிஸ்தான் நட்சத்திரங்கள்! - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமீர் மற்றும் நடுவரிசை பேட்ஸ்மேன் ஹரிஸ் சோஹைல் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களால், வரவிருக்கும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலிருந்து விலகியுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"ஆகஸ்ட் மாதம் தனது இரண்டாவது குழந்தையின் பிறப்பு காரணமாக முகமது அமீர் இங்கிலாந்து தொடரில் பங்கேற்கமாட்டார். அதே நேரத்தில் குடும்ப காரணங்களால் ஹரிஸ் சோஹைலும் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இங்கிலாந்து அணிக்கெதிராக விளையாடவிருக்கும் மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று டி 20 போட்டிகளுக்கு பாகிஸ்தானை சேர்ந்த 28 வீரர்கள் மற்றும் கூடுதலாக 14 வீரர்களை அனுப்பவுள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.