தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தினேஷ் கார்த்திக்கை கலாய்க்கும் ரஸல்... கேகேஆர் அட்ராசிட்டீஸ்...! - ரஸல்

தினேஷ் கார்த்திக் தொடங்கியுள்ள புதிய யூ ட்யூப் சேனலில் ரஸல், சுனில் நரைன் ஆகியோர் பங்கேற்று பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

amid-no-ipl-kkr-players-dk-russell-narine-share-light-banter-on-social-media
amid-no-ipl-kkr-players-dk-russell-narine-share-light-banter-on-social-media

By

Published : Jun 8, 2020, 10:15 PM IST

ஐபிஎல் 13ஆவது சீசன் தொடர் கரோனா வைரஸ் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், கிரிக்கெட் வீரர்கள் மற்ற வீரர்களுடன் உரையாடி ரசிகர்களை உயிர்ப்புடன் வைத்துள்ளனர்.

இந்நிலையில் கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் புதிதாக தொடங்கியுள்ள யூ ட்யூப் சேனலில் அதிரடி வீரர் ரஸல், ஆல் ரவுண்டர் சுனில் நரைன் ஆகியோர் பேசினர். அதில் தினேஷ் கார்த்திக் அதிகமாக முடி வளர்த்ததைப் பார்த்த ரஸல், ''திகே உனது பார்பர் ஏதும் தவறு செய்துவிட்டாரா?'' என கலாய்த்துள்ளார்.

இதையடுத்து சுனில் நரைன், '' நான் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும், புதிய பந்தில் பந்து வீச வேண்டும்.. இன்னும் என்ன செய்ய வேண்டும், கேப்டன்சி மட்டுமே மீதம் உள்ளது. அதனை மேற்கொண்டுவிட்டால், வேறு எதுவும் இல்லை'' என பேசினார்.

ரஸல், தினேஷ் கார்த்திக், சுனில் நரைன் ஆகியோர் ஒருவருக்கு ஒருவர் கலாய்க்கும் வீடியோ சமூலவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details