இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ராயுடு, ஜூலை மாதம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பு வழங்காததால்தான் அவர் இந்த முடிவை எடுத்ததாதக கூறப்பட்டது. இந்திய அணிக்காக 55 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ராயுடு, இதுவரை 1694 ரன்களை எடுத்துள்ளார்.
அவசரப்பட்டு முடிவெடுத்துவிட்டேன்... மீண்டும் களமிறங்க தயார்- ராயுடு - Ambati Rayudu
உணர்ச்சிவசத்திலும் பதற்றமான மன நிலையிலும் தான் ஓய்வு முடிவு எடுத்துவிட்டதாக, சிஎஸ்கே வீரர் அம்பதி ராயுடு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இவர் தனது ஓய்வு முடிவை திரும்பப் பெற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்துக்கு ராயுடு கடிதம் எழுதியுள்ளார். அதில், ”நான் மீண்டும் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஆர்வமாக இருக்கிறேன். உணர்ச்சிவசத்திலும் பதற்றமான மனநிலையிலும் நான் ஓய்வு முடிவை அறிவித்துவிட்டேன். வரும் செப்டம்பர் 10ஆம் தேதி ஹைதராபாத் அணியில் சேர தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தான் மீண்டும் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று கூறி, தனக்கு துணையாக இருந்த சி.எஸ்.கே அணிக்கும், லக்ஷ்மன், நோய்ட் டேவிட் ஆகியோருக்கு ராயுடு நன்றி தெரிவித்துள்ளார்.