தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இந்திய வீரர்களுக்கு லாரா ட்ரீட்; பிராவோ ட்வீட் - இந்திய வீரர்களுடன் பிராவோ

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் லாரா கொடுத்த இரவு விருந்தில் இந்திய வீரர்கள் ஷிகர் தவான், ரோகித் ஷர்மா உள்ளிட்ட ஆறு பேர் கலந்துகொண்டனர்.

Bravo

By

Published : Aug 17, 2019, 7:30 PM IST

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20, ஒருநாள் தொடரை வென்று அசத்தியது. இதைத்தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி அன்டிகுவாவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் லாரா, இந்திய வீரர்கள் ஆறு பேருக்கு தனது வீட்டில் இரவு விருந்து அளித்துள்ளார். அதில், ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, கே.எல். ராகுல், மயங்க் அகர்வால், ஜடேஜா, சாஹல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதேசமயம், அந்த விருந்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களான கிறிஸ் கெயில், பொல்லார்ட், பிராவோ, சுனில் நரைன் ஆகியோரும் கலந்துகொண்டனர். அப்போது, எடுத்த புகைப்படத்தை பிரோவா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.

பிராவோவின் பதிவு
இதுமட்டுமின்றி, ‘லாரா உங்களது வீட்டில் விருந்து அளித்ததற்கு நன்றி. என் சக வீரர்களையும், என் இந்திய சகோதரர்களையும் (வீரர்களையும்) சந்தித்ததில் எனக்கு எப்போதுமே மகிழ்ச்சிதான்’ என அந்த பதிவில் பிராவோ குறிப்பிட்டிருந்தார். தற்போது, லாராவின் விருந்தில் இந்திய வீரர்கள் பங்கேற்ற புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details