தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

உங்களை எப்போதும் பின்பற்றுவேன் - பும்ரா - பும்ரா

கிரிக்கெட்டிற்காக நீங்கள் செய்த அனைத்திற்கும் நன்றி உங்களை எப்போதும் பின்பற்றுவேன் என இலங்கை வீரர் மலிங்காவின் ஓய்வுக் குறித்து இந்திய பந்துவீச்சாளர் பும்ரா ட்வீட் செய்துள்ளார்.

உங்களை எப்போதும் பின்பற்றுவேன் - பும்ரா

By

Published : Jul 27, 2019, 10:38 PM IST

கிரிக்கெட்டில் சிறந்த யார்க்கர் மன்னனாக திகழ்ந்தவர் மலிங்கா. தனது வித்தியாசமான பந்துவீச்சு முறையால் பல முன்னணி பேட்ஸ்மேன்களை திணறடித்த இவர், நேற்று வங்கதேச அணிக்கு எதிரான போட்டியோடு ஓய்வு பெற்றுள்ளார்.

தனக்கென தனி ஸ்டைல் மூலம் ரசிகர்கள் பட்டாளத்தை வென்ற இவருக்கு, தற்போது பல்வேறு அணிகளை சேர்ந்த வீரர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா மலிங்கா குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,

"கிளாசிக் ஸ்பெல் மலி... கிரிக்கெட்டிற்காக நீங்கள் செய்த அனைத்திற்கும் நன்றி. உங்களை நான் எப்போதும் வியப்புடன் பார்த்து முன்மாதிரியாக ஏற்றுக்கொண்டுள்ளேன். உங்களை எப்போதும் பின்பற்றுவேன்” என பதிவிட்டிருக்கிறார்.

இருவரும் ஐபிஎல் கிரிக்கெட்டில், மும்பை அணிக்காக ஒன்றாக விளையாடிவருகின்றனர். விநோதமான பவுலிங் ஆக்ஷன், யார்க்கர் பந்தை வீசுவதுதான் இருவருக்கும் இருக்கும் ஒற்றுமை. பும்ராவின் வளர்ச்சிக்கு மலிங்காவும் முக்கிய காரணமாக இருந்துள்ளார். இலங்கை அணிக்காக 226 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய மலிங்கா மொத்தம் 338 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details