இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடிவருகின்றது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க பகல் - இரவு டெஸ்ட் போட்டி வருகிற 22ஆம் தேதி கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டனான அஜிங்கியா ரஹானே நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகலிரவு டெஸ்ட் பேட்டியைப் பற்றி பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
அந்தப் பதிவில், 'ஏற்கனவே நான் பகலிரவு டெஸ்ட் போட்டியைப் பற்றி கனவு கண்டுகொண்டுதான் இருக்கிறேன்' எனக் குறிப்பிட்டு, பிங்க் பந்துடன் தூங்குவது போன்ற புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
தற்போது ரஹானேவின் ட்விட்டர் பதிவு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகப் பரவிவருகிறது. மேலும் இவர் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 86 ரன்களை விளாசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:T10 League: அடியா இது... புதிய சாதனையை படைத்த லின்!