கொல்கத்தாவில் நடைபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது. அதனைத் தொடர்ந்து வருகிற டிசம்பர் 6ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த பயிற்சியின் போது, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, சக அணி வீரர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் ரிஷப் பந்து ஆகியோரிடையே ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டிருந்தார்.