ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தற்போது இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது. இதில் டெஸ்ட் தொடருக்கு முன் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலிய ஏ அணியுடன் மூன்று நாள் கொண்டப் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.
இதனிடையே இந்தப் பயிய்சி ஆட்டத்திற்கான ஆஸ்திரேலிய ஏ அணியின் கேப்டனாக இளம் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை ஆஸ்திரேலிய அணியின் தேர்வுக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வுக்குழுவில் உள்ள டிரெவார் ஹான்ஸ் வெளியிட்ட அறிக்கையில்,
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியை பலமுள்ளதாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நோக்கில் இந்தத்தேர்வு நடைபெற்றுள்ளது. இந்த பயிற்சி போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் உள்ளூர் தொடரான ஷெஃப்பீல்டு ஷீல்டு தொடரில் பங்கேற்றுள்ள வீரர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.