தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

அதிக போட்டிகளில் களநடுவர்...! - சாதனை படைக்கவுள்ள பாகிஸ்தானியர்! - சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக டெஸ்ட் போட்டிகளில் களநடுவராக பணியாற்றியவர்

பெர்த்: பாகிஸ்தானைச் சேர்ந்த அலீம் தார், சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக டெஸ்ட் போட்டிகளில் களநடுவராகப் பணியாற்றியவர் என்ற சாதனையைப் படைக்கவுள்ளார்.

Aleem Dar
Aleem Dar

By

Published : Dec 11, 2019, 10:11 PM IST

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக பெர்த்தில் நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டிக்கு களநடுவராகப் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அலீம் தார் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் போட்டியில் அவர் பங்கேற்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் தனது 129ஆவது டெஸ்ட் போட்டியில் களநடுவராகச் செயல்படுவார். இதன்மூலம் அவர் அதிக டெஸ்ட் போட்டிகளுக்கு களநடுவராகச் செயல்பட்ட முதல் நபர் என்ற சாதானையைப் படைக்கவுள்ளார்.

இதற்கு முன்னதாக ஜமைக்காவைச் சேர்ந்த ஸ்டீஸ் பக்னோர் 128 டெஸ்ட் போட்டிகளில் களநடுவராகப் செயல்பட்டதே சாதனையாக இருந்தது.

இதையும் படிங்க:தடைகளை வென்று சரித்திரம் படைக்கும் பிரித்வி ஷா!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details