தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஆல்பி மார்க்கலை மிஸ் செய்யும் சிஎஸ்கே ரசிகர்கள்! - All-rounder

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக முந்தைய சீசன்களில் களமிறங்கிய தென் ஆப்பரிக்க ஆல்-ரவுண்டர் ஆல்பி மார்க்கல் மீண்டும் சிஎஸ்கே அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் அன்பு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆல்பி மார்க்கல்

By

Published : Mar 18, 2019, 10:19 PM IST

ஐபிஎல் தொடரின் வெற்றிக்கு சென்னை அணியும் ஒரு காரணம் என்றே கூறலாம். ஏனெனில் மற்ற அணிகளுக்கு அந்த அணிகளின் ரசிகர்கள் தரும் ஆதரவு அந்த மேட்சில் மட்டுமே இருக்கும். ஆனால் சென்னை அணியின் ரசிகர்கள் சிஎஸ்கே அணியையும், அந்த அணி வீரர்களையும் தங்களின் குடும்பத்தில் ஒருவராகவே கருதுகின்றனர். ஐபிஎல் முடிந்த பின்பும் அவர்களை தொடர்ந்து பாலோ செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

சென்னை அணியில் ஆஸ்திரேலியாவின் மைக் ஹசி, மேத்யூ ஹேடன், தென் ஆப்பரிக்காவின் நிட்னி, ஆல்பி மார்க்கல், என பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு வீரர்கள் ஆடியுள்ளனர். இவர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் போது சென்னையை தங்கள் சொந்த ஊர் போன்று கருதும்படி ரசிகர்களின் ஆதரவு இருக்கும்.

இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர் வரும் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. முதல் போட்டியில் சிஎஸ்கே மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், சிஎஸ்கே அணியினர் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டபோது, அதை காணவே மைதானம் நிரம்பி வழிந்தது. இந்த வீடியோ பகிரப்பட்டதையடுத்து அது வைரலானது.

அந்த வீடியோவை சென்னை அணியில் முன்பு விளையாடிய அதிரடி ஆல்-ரவுண்டரான ஆல்பி மார்கல் பதிவிட்டு இதுபோன்று ஒரு கலக்கலான பயிற்சி ஆட்டம் இருந்தால் நினைத்துப் பாருங்கள் என பதிவிட்டார்.

இதைப் பார்த்த சிஎஸ்கே ரசிகர்கள் அன்பு மழையை பொழிய துவங்கி விட்டனர். பலரும் கடந்த காலங்களில் சிஎஸ்கே அணிக்காக ஆடியபோது மார்க்கல் நிகழ்த்திய பல மேஜிக்குகளை நினைவு கூர்ந்தனர். குறிப்பாக கடந்த 2012 ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில், மார்க்கல் ஒரே ஓவரில் 28 ரன்கள் எடுத்து சிஎஸ்கேவின் வெற்றிக்கு முக்கிய திருப்பமாக அமைந்தார்.

அப்போட்டியில் முதலில் ஆடிய பெங்களூரு அணி 205 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய சிஎஸ்கே 18 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் குவித்திருந்தது. கடைசி இரண்டு ஓவரில் 43 ரன்கள் என்பதால் சென்னை அணி வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்று ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்திருந்தனர்.

அப்போது ஆல்பி மார்க்கல் களமிறங்கி கோலி வீசிய 19வது ஓவரை சிதறடித்து ஒரே ஓவரில் இரண்டு பவுண்டரி, மூன்று சிக்ஸர்கள் அடித்து ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். இறுதி ஓவரில் அவர் அவுட்டானாலும் சென்னை அணி அந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அந்த போட்டியை இன்றளவும் யாராலும் மறக்க முடியாது, குறிப்பாக கோலி இப்போது பவுலிங் வீசினாலும் அவருக்கு ஆல்பி மார்க்கல் முன் தோன்றினால் ஆச்சர்யபடுவதற்கு ஒன்றுமில்லை. ஆல்பி மார்க்கல் பெரும்பாலும் ஆடும் 11 வீரர்களில் நிச்சயமாக இருப்பார். ஏனெனில் கேப்டன் தோனியின் ஆஸ்தான ஆல்-ரவுண்டரான மார்க்கல் பவுலிங்கிலும் பலமுறை அசத்தி ரன்களை கட்டுப்படுத்துவார்.

அதன்பின் சென்னை அணியின் தடை சமயத்தில் பிற அணிகளுக்காக வாங்கப்பட்ட மார்க்கல் மீண்டும் சென்னை அணியில் இடம்பெறவில்லை. எனவே அவரை மீண்டும் அணியில் கோச், ஆலோசகர் போன்று ஏதேனும் ஒரு இடத்தில் சேர்க்க வேண்டும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details