தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

அடுத்த விக்கெட்டை இழக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் - Harbhajan Singh

harbhajan
harbhajan

By

Published : Sep 4, 2020, 2:15 PM IST

Updated : Sep 4, 2020, 2:47 PM IST

14:09 September 04

ஐபிஎல் 2020 சீசனிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சூழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் விலகியுள்ளார்.

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐபிஎல் தொடர், இம்மாதம் 19ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது.

இதைத்தொடர்ந்து, ஐபிஎல் அணிகளைச் சேர்ந்த வீரர்கள் கடந்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சென்று, அங்கு ஆறு நாள்கள் தனிமைப்படுத்துதலை மேற்கொண்டனர்.

இதற்கிடையே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா சொந்த காரணங்களால் நடப்பு ஐபிஎல் போட்டியிலிருந்து விலகினார். இது சென்னை அணிக்கு பெரும் இழப்பாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சூழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கும் சொந்த காரணங்களால் நடப்பு போட்டியிலிருந்து விலகியுள்ளார். தனது முடிவை அணியிடம் தெரிவித்துவிட்டதாக அவர் கூறியுள்ளார். போட்டியிலிருந்து விலகிய ரெய்னா, ஏற்கனவே இந்தியா  திரும்பிவிட்டார்.  

கரோனா வைரஸ் நோயால் இரண்டு வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை சூப்பர் கிஷ்ஸ் அணி தெரிவித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டு வீரர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்தலை மேற்கொண்டுள்ளதாகவும், அதற்கு பிறகு அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் அணி தெரிவித்துள்ளது.

இதுநாள்வரை, சென்னை அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபடவில்லை எனவும் கூறப்படுகிறது.

Last Updated : Sep 4, 2020, 2:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details