தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஜம்மு - காஷ்மீர் வீரர்களுக்கு பயிற்சியளிக்கும் ரெய்னா...!

ஸ்ரீநகர்: 2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலிருந்து சுரேஷ் ரெய்னா விலகிய நிலையில், ஜம்மு - காஷ்மீர் கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சியளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

after-pulling-out-of-ipl-raina-wants-to-coach-j-and-ks-budding-cricketers
after-pulling-out-of-ipl-raina-wants-to-coach-j-and-ks-budding-cricketers

By

Published : Sep 18, 2020, 7:52 PM IST

இந்திய அணியின் நட்சத்திர வீரராக வலம்ந்தவர் சுரேஷ் ரெய்னா. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வை அறிவித்த சில மணி நேரங்களிலேயே சுரேஷ் ரெய்னாவும் ஓய்வை அறிவித்தார். இதையடுத்து இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு அமீரகம் சென்ற இவர், சில நாள்களிலேயே நாடு திரும்பினார். சுரேஷ் ரெய்னா வெளியேறியதற்கு காரணங்கள் சரியாக தெரியாததால், பல கதைகள் கிளம்பியது.

இறுதியாக அவரது உறவினர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் வெளியவரும்போது அனைத்துக் கட்டுக்கதைகளும் பொய் என தெரியவந்தது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி ஜம்மு - காஷ்மீர் டிஹிபிக்கு ரெய்னா கடிதம் எழுதினார். அதில், '' கிரிக்கெட்டைத் தொடங்குவதற்கும், ஊக்குவிப்பதற்கும் கிடைத்த மிகுந்த நம்பிக்கையுடன் இந்த கடிதத்தை எழுதுகிறேன். ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த குழந்தைகள் கிரிக்கெட் மூலம் தங்களது வாழ்க்கையை வடிவமைக்க ஒரு வாய்ப்பை கொடுக்க வேண்டும்.

இதுதொடர்பாக ஜம்மு - காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்காவை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அவருடனான சந்திப்பில் விளையாட்டின் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டிய தேவைகள் பற்றி பேசினோம் என பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக டிஜிபி தில்பாக் சிங், ''ஜம்மு - காஷ்மீர் இளைஞர்கள், குழந்தைகளுக்கு விளையாட்டு திறனை அதிகரிக்கும் விதமாக பல ஆலோசனைகள் செய்தோம். அதில் ரெய்னா உள்ளூரில் விளையாடும் சில கிரிக்கெட் அணிகளுக்கு ஆலோசகராக செயல்படவுள்ளார்'' என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:ஐபிஎல் 2020: 13ஆவது சீசனுக்காக செய்யப்பட்டுள்ள 10 மாற்றங்கள்...!

ABOUT THE AUTHOR

...view details