நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நேற்று (பிப்.22) நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணியில் டெவன் கான்வே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணி பந்துவீச்சை பவுண்டரிகளுக்கு பறக்கவிட்டார். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கான்வே இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தும் ஒரு ரன்னில் சதமடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார்.
இதன் மூலம் இன்னிங்ஸ் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களை குவித்தது. இதில் டெவன் கான்வே 99 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பின்னர் இமாலய இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணியினர் சோதி, சௌதி, போல்ட் ஆகியோரது பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.