இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 29ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதற்கான பயிற்சியில் அனைத்து அணி வீரர்களும் தீவிரம் காட்டிவருகின்றனர்.
அந்தவகையில், ரசிகர்களால் தல என்றழைக்கப்படும் சென்னை அணியின் தோனி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். இந்நிலையில், ரசிகர்களால் சின்ன தல என்றழைக்கப்படும் ரெய்னா இன்று சென்னை அணியுடன் பயிற்சியில் இணைந்துள்ளார்.
இன்று சென்னை வந்த ரெய்னா சிஎஸ்கே அணியுடன் இணைந்தபோது, கேப்டன் தோனியுடன் கட்டித்தழுவிய வீடியோவை சிஎஸ்கே அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. அதனுடன் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்றும் குறிப்பிட்டிருந்தது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
இங்கிலாந்தில் கடந்தாண்டு நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடருக்குப் பின் தோனி தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ளதால், அவரது ஆட்டத்தைக் காண ரசிகர்கள் அதீத ஆர்வத்துடன் இருக்கின்றனர்.
இதையும் படிங்க:கெத்தா நடந்துவர்றான்...! - சென்னையில் 'தல தோனி'யின் தரிசனம்