இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் அடுத்த மாதம் 29ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கான அணி வீரர்கள் தங்களது பயிற்சிகளை ஒரு மாதத்திற்கு முன்பாகவே ஆரம்பித்து தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான டாம் கர்ரன் கடந்த ஐபிஎல் வீரர்களுக்கான ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஒப்பந்தமானார்.
இதனையடுத்து இன்று செய்தியாளர்களிடையே பேசிய கர்ரன், ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியவர்கள்தான் பேட்டிங்கில் இவ்வுலகின் தலைசிறந்த வீரர்கள் என நினைக்கிறேன். அதனால்தான் இந்த ஐபிஎல் போட்டிகளில் அவர்களின் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் ஆர்வத்தை திருப்பியுள்ளேன் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: நெட்டிசன்களுடன் இணைந்து ட்ரம்பை கலாய்த்த இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன்
!