தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மழையால் பாதியோடு முடிந்த ஷாகித் அப்ரிடியின் அதிரடி ஆட்டம்!

பிஎஸ்எல் தொடரின் 19ஆவது லீக் போட்டியில் கராச்சி கிங்ஸ் - முல்தான் சுல்தான்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.

afridi-stars-for-multan-sultans-before-karachi-kings-match-abandoned
afridi-stars-for-multan-sultans-before-karachi-kings-match-abandoned

By

Published : Mar 7, 2020, 6:11 PM IST

2020ஆம் ஆண்டுக்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் அணியை எதிர்த்து முல்தான் சுல்தான்ஸ் அணி ஆடியது. இதில் டாஸ் வென்ற கராச்சி கிங்ஸ் அணியின் கேப்டன் இமாத் வாசிம் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

பின்னர் களமிறங்கிய முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு மொயின் அலி - அஷ்ரஃப் ஆகியோர் தொடக்கத்தைக் கொடுத்தனர். மொயின் அலி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த அஷ்ரஃப் 2 ரன்களிலும், கேப்டன் மசூத் 9 ரன்களிலும், ரோஸ்ஸோவ் 0, புபாரா 4 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் 64 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து முல்தான் சுல்தான்ஸ் அணி திணறியது.

மழையால் பாதியோடு முடிந்த ஷாகித் அப்ரிடியின் அதிரடி ஆட்டம்

பின்னர் களம் புகுந்த அப்ரிடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 17 பந்துகளை எதிர்கொண்ட அப்ரிடி 3 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து 35 ரன்கள் எடுத்திருந்தார். இதனால் முல்தான்ஸ் அணி 16.5 ஓவர்களில் 102 ரன்களை எடுத்திருந்தது.

அப்போது திடீரென மழை பெய்ததால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தாஸ், தமிம் அதிரடியால் ஜிம்பாப்வேவை ஒயிட் வாஷ் செய்த வங்கதேசம்!

ABOUT THE AUTHOR

...view details