கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள வங்கதேச மக்களுக்கு உதவும் வகையில் அந்நாட்டின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் முஷ்பிகூர் ரஹிம், டெஸ்டில் தனது முதலாவது இரட்டை சதமடித்த பேட்டை ஏலத்தில் விற்பனை செய்து, அதில் கிடைக்கும் மொத்த தொகையையும் மருத்துவமனைக்கு அளிப்பதாக கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி, முஷ்பிக்கூரின் பேட்டை 20 ஆயிரம் டாலருக்கு ஏலத்தில் வாங்கியுள்ளார். இதன் இந்திய மதிப்பானது ரூ.15 லட்சமாகும். இது குறித்து முஷ்பிக்கூர் தனியார் விளையாட்டு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில்,
"எனது பேட்டை ஏலத்தில் விற்பனை செய்வதாக அறிவித்த முடிவிலிருந்து பின்வாங்கலாம் என்று நினைத்திருந்தேன். ஏனெனில் நிறைய போலி ஏல ஈடுபாட்டாளர்கள் இதில் பங்கேற்றிருந்தனர். இதனையடுத்து அஃப்ரிடி அவர்கள் எனக்கு நேரடியாக தொலைபேசி அழைப்பில் இணைந்து, எனது பேட்டின் ஏலம் குறித்தான விவரங்களை கேட்டறிந்தார்.