தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாலை விபத்தில் உயிரிழப்பு! - நஜீப் தரகாய் உயிரிழப்பு

காபூல்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் நஜீப் தரகாய் சாலை விபத்தில் உயிரிழந்தார்

fg
fh

By

Published : Oct 6, 2020, 3:12 PM IST

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் நஜீப் தரகாய் கடந்த வெள்ளிக்கிழமை ஜலதாபாத் நகரில் சாலையைக் கடந்தபோது கார் விபத்தில் சிக்கினார். இதில், பலத்த காயமடைந்த அவரை உடனடியாக அருகிலிருந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்

இந்நிலையில் இன்று, சிகிச்சைப் பலனின்றி நஜீப் தரகாய் உயிரிழந்துவிட்டதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது.

இது குறித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில், “அதிரடியாக ஆடக்கூடிய நஜீப் தரகாய் உயிரிழப்பு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு மிகப்பெரும் இழப்பு” என இரங்கல் தெரிவித்துள்ளது.

இவரது இழப்பிற்கு கிரிக்கெட் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். 29 வயதான இவர் ஆப்கானிஸ்தான் அணிக்காக 12 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details