தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பகலிரவு டெஸ்ட்: பிரித்வி ஷாவின் விக்கெட்டை முன்பே கணித்த பாண்டிங்! - ரிக்கி பாண்டிங்

இந்திய அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா விரைவில் ஆட்டமிழப்பார் என அஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கணித்ததைப் போலவே, இப்போட்டியில் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார்.

Adelaide Test: How Ponting 'exactly' predicted Shaw's dismissal
Adelaide Test: How Ponting 'exactly' predicted Shaw's dismissal

By

Published : Dec 17, 2020, 3:20 PM IST

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டின் இன்று (டிசம்பர் 17) தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.

ஷாவின் விக்கெட்டை கணித்த பாண்டிங்:

அப்போது தொலைக்காட்சி வர்ணனையில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், இந்திய அணியின் தொடக்க வீரர் விரைவில் ஆட்டமிழப்பார் என்று தெரிவித்து வந்தார்.

இதுகுறித்து பேசிய ரிக்கி பாண்டிங், பிரித்வி ஷா தனது உடலிலிருந்து விலகிச்செல்லும் பந்துகளை சமர்த்தியமாக விளையாடும் திறன் படைத்தவர். ஆனால் அவரது உடலுக்கு வரும் பந்துகளை சமாளிக்க தடுமாறி வருகிறார்.

இதனால் மிட்செல் ஸ்டார்க் இன்று பிரித்வி ஷாவின் விக்கெட்டை வீழ்த்த அதிக வாய்ப்புகள் உள்ளது என்று கூறியிருந்தார்.

டக் அவுட்டான பிரித்வி ஷா:

அதன்பின் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பிரித்வி ஷா, மிட்செல் ஸ்டார்க் வீசிய இரண்டாவது பந்திலேயே கிளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார். இதனால் ரிக்கி பாண்டிங்கின் கணிப்பு சரியானதாக அமைந்துள்ளது.

இதற்கு முன்னதாக நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டத்திலும் பிரித்வி ஷா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பன்டஸ்லீகா: சாதனை படைத்த ராபர்ட் லெவாண்டோவ்ஸ்கி!

ABOUT THE AUTHOR

...view details