ஆஸ்திரேலியாவில் ஒன்பதாவது சீசன் பிக் பேஷ் லீக் டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 15ஆவது லீக் போட்டியில், ஆரோன் பின்ச் தலைமையிலான மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி, அலெக்ஸ் கேரி தலைமையிலான அடிலெய்ட் ஸ்ட்ரைகர்ஸ் அணியை எதிர்கொண்டது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அடிலெய்ட் அணி சால்ட் 54, அலெக்ஸ் கேரி 41 ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்களை எடுத்தது. மெல்போர்ன் அணி சார்பில் ரிச்சர்ட்சன் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன்பின் களமிறங்கிய மெல்போர்ன் அணியில் ஆரோன் பின்ச் அதிரடியாக விளையாடி 50 ரன்களில் ஆட்டமிழந்தார். அவருக்குப்பின் களமிறங்கிய மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இறுதியில் மெல்போர்ன் அணி எட்டு விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே எடுத்தது.
அடிலெய்டு அணி சார்பில் ரஷித் கான், சிடில், கேம்ரூன் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதன் மூலம் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியை வீழ்த்தியது. இந்தப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய ரஷித் கான் ஆட்டநாயகன் விருது வென்றார்.
இதையும் படிங்க: பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆஸி. அசத்தல் வெற்றி!