உலகக்கோப்பை தொடரில் ஏற்பட்ட படுதோல்வி காரணமாக அப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த குல்புதின் நைய்ப்பை கேப்டன் பதவியிலிருந்து நீக்கி, புதிய கேப்டனாக நட்சத்திர வீரர் ரஷித் கானை கேப்டனாக அந்த அணி நிர்வாகம் நியமித்தது.
இதன் மூலம் இளம்வயதில் சர்வதேச கிரிக்கெட் அணியை வழிநடத்தியவர் என்ற சாதனையையும் படைத்திருந்தார். அதன் பின் வங்கதேசம், முத்தரப்பு டி20 தொடர், வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான தொடரில் ஆப்கானிஸ்தான் அணியை அவர் வழிநடத்தி வந்தார்.
ஆனால் தற்போது ஆப்கானிஸ்தான் அணி நிர்வாகம் ரஷித் கானை கேப்டன் பதவியிலிருந்து நீக்கி, அந்த அணியின் முன்னாள் கேப்டனும், அனுபவ வீரருமான ஆஸ்கார் ஆப்கானை அனைத்து விதமான போட்டிகளுக்கு கேப்டனாக நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணியின் அனுபவ வீரரான இவர் கடந்த 2015லிருந்து 2019வரை அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தேசிய ஊக்க மருந்து தடுப்பு அமைப்பின் விளம்பரத் தூதராக பிரபல பாலிவுட் நடிகர் நியமனம்!