டி10 எனப்படும் பத்து ஓவர்கள் மட்டும் கொண்ட கிரிக்கெட் தொடர் அபுதாபியில் நடைபெற்று வருகின்றது. இதில் நேற்று (பிப்.04) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டீம் அபுதாபி அணி - பங்களா டைகர்ஸ் அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களா டைகர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய டீம் அபுதாபி அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்தது. அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
இருந்த போதிலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய பால் ஸ்டெர்லிங் அரைசதம் கடந்து அசத்தினார். இதன் மூலம் 10 ஓவர்கள் முடிவில் டீம் அபுதாபி அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 116 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பால் ஸ்டெர்லிங் 64 ரன்களை எடுத்தார்.