தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

T10 League: கர்நாடக டஸ்கர்ஸ் அணியின் புதிய உரிமையாளர் நியமனம்! - புதிய உரிமையாளராகத் தொழிலதிபர் கிருஷ்ண குமார் சௌத்திரியை அறிவித்துள்ளது

அபுதாபி: டி10 லீக் கிரிக்கெட் தொடரின் கர்நாடக டஸ்கர்ஸ் அணி இன்று தனது புதிய உரிமையாளராகத் தொழிலதிபர் கிருஷ்ண குமார் சௌத்திரியை அறிவித்துள்ளது.

Karnataka Tuskers

By

Published : Nov 19, 2019, 1:33 PM IST

கிரிக்கெட் போட்டிகளின் அடுத்த பரிணாமமான டி10 லீக் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இத்தொடரில் ஹாசிம் ஆம்லா தலைமையிலான அணி கர்நாடக டஸ்கர்ஸ்.

இந்த அணி இன்று தனது உரிமையாளராக இந்தியாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும் பாலிவுட் படத் தயாரிப்பாளருமான கிருஷ்ண குமார் சௌத்திரியை தேர்ந்தெடுத்துள்ளது.

இது குறித்து சௌத்திரி கூறுகையில், "குறுகிய வடிவ கிரிக்கெட் தொடரான டி10 லீக் அணியின் உரிமையாளராகச் செயல்படவிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது. மேலும் டி10 கிரிக்கெட் தொடரை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்வதற்காக என்னால் முடிந்தவற்றை நான் செய்வேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'ஏற்கனவே நான் கனவு கண்டுகொண்டுதான் இருக்கிறேன்' - ரஹானே!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details