அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கறுப்பினத்தவர் காவல் துறையினரின் தாக்குதலால் இறந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் பற்றி கிரிக்கெட் வீரர்கள் கிறிஸ் ஜெய்ல், டேரன் ஷமி ஆகியோர் ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இனவாதத்தால் தானும் பாதிக்கப்பட்டுள்ளேன் என இந்திய வீரர் அபினவ் முகுந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
'இனவாதத்தால் நானும் பாதிக்கப்பட்டுள்ளேன்' - அபினவ் முகுந்த்
ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணித்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இனவாதத்தால் தானும் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய அணி வீரர் அபினவ் முகுந்த் தெரிவித்துள்ளார்.
abhinav-mukund-open-up-about-racism-they-faced-on-cricket-field
இதுகுறித்து இந்திய அணி அபினவ் முகுந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் , ''எனது 15 வயதிலிருந்து நான் கிரிக்கெட் போட்டிகளுக்காக பல்வேறு நாடுகளுக்கும், பகுதிகளுக்கும் பயணித்துள்ளேன். அப்போது எனது நிறத்தைப் பார்க்கும் பலருக்கும், அது ஒரு பிரச்னையைக் கொடுக்கும்.
அதனை நான் உணர்ந்துள்ளேன். ஆனால், அவற்றை ஒருபோதும் நான் பிரச்னைகளாக கருதியதில்லை. அதனால் பயிற்சியை மேலும் அதிகப்படுத்தியுள்ளேன். நிறம் எப்போதும் ஒரு மனிதனுக்கு அடையாளமில்லை'' எனப் பதிவிட்டுள்ளார்.