தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

வங்கதேச அணியின் தேர்வாளராக அப்துர் ரஸாக் நியமனம்!

வங்கதேச கிரிக்கெட் அணியின் தேர்வாளராக அந்த அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் அப்துர் ரஸாக்கை வங்கதேச கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.

Abdur Razzak included in Bangladesh selector's panel
Abdur Razzak included in Bangladesh selector's panel

By

Published : Jan 28, 2021, 12:38 PM IST

வங்கதேச அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளராக திகழ்ந்தவர் அப்துர் ரஸாக். அந்த அணிக்காக 13 டெஸ்ட், 153 ஒருநாள், 34 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி 250க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

இந்நிலையில், வங்கதேச கிரிக்கெட் அணியின் தேசிய தேர்வாளராக அப்துர் ரஸாக் நியமிக்கப்படுவதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் இன்று (ஜன.28) அறிவித்துள்ளது. தற்போது நியமிக்கப்பட்டுள்ள அப்துர் ரஸாக், மின்ஹாஜுல் ஆபிதின் மற்றும் ஹபீபுல் பஷருடன் இணைந்து செயலாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய அப்துர் ரஸாக், "இது நிச்சயம் ஒரு புது அனுபவமாக அமையும் என நம்புகிறேன். எனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை நான் சரியாக செய்வேன் என்ற நம்பிக்கை எனக்குள்ளது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: இபிஎல்: மான். யுனைடெட்டை பந்தாடிய ஷெஃபீல்ட் யுனைடெட்!

ABOUT THE AUTHOR

...view details