ஆஸ்திரேலியாவில் மார்ஷ் ஒருநாள் கிரிக்கெட் உள்ளூர் போட்டி நடைபெற்றுவருகிறது. இதில், இன்று நடைபெற்ற போட்டியில், குவியன்ஸ்லாந்து - விக்டோரியோ அணிகள் மோதின. மெல்போர்ன் ஜங்க்ஷன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த குவியன்ஸ்லாந்து அணி 50 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 306 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 112 ரன்கள் விளாசினார்.
14 சிக்சர்கள்... 188 ரன்கள்... வெறித்தனம் காட்டிய ஆரோன் ஃபின்ச்! - மார்ஷ் கோப்பை
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், ஆரோன் ஃபின்ச் 14 சிக்சர்கள் உட்பட 188 ரன்கள் விளாசி அசத்தியுள்ளார்.
இதையடுத்து, 305 ரன்கள் இலக்குடன் பேட்டிங் செய்த விக்டோரியா அணியில் ஆரோன் ஃபின்ச், சாம் ஹார்ப்பர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே ஃபின்ச் அதிரடியாக விளையாடினார். இந்த ஜோடி 136 ரன்கள் சேர்த்த நிலையில், சாம் ஹார்ப்பர் 44 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து மார்கஸ் ஹாரிஸுடன் ஜோடி சேர்ந்த ஃபின்ச் பேட்டிங்கில் தொடர்ந்து அதிரடிக் காட்டினார். இதனால், விக்டோரியா அணி 44.2 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. ஆரோன் ஃபின்ச் 151 பந்துகளில் 14 சிக்சர்கள், 11 பவுண்டரிகள் என 188 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம், உள்ளூர் போட்டிகளில் தனது அதிகபட்ச ஸ்கோரை அவர் எடுத்து சாதனை படைத்துள்ளார்.