தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன். இவர் இந்தியன் பிரீமியர் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக், லங்கா பிரீமியர் லீக் போன்ற பிரபல டி-20 தொடர்களிலும் பங்கேற்று விளையாடி வருகிறார்.
இந்நிலையில், கடந்த ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய ஸ்டெய்ன், நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதற்கேற்றார் போல் ஆர்.சி.பி. அணியும் ஸ்டெய்னை தங்களது அணியிலிருந்து விலக்கியது.
அண்மையில்இது தொடர்பாக டேல் ஸ்டெய்ன் அளித்த பேட்டி ஒன்றில், “பாகிஸ்தான் சூப்பர் லீக், இலங்கை பிரிமியர் லீக் டி20 தொடர்கள் கிரிக்கெட்டுக்குப் பயனளிக்கும். ஆனால் ஐபிஎல் கிரிக்கெட்டில் எப்போதும் பணத்தைப் பற்றிதான் பேச்சு இருக்கும். அதில் கிரிக்கெட்டை நாம் மறந்துவிடுவோம்” என்று கருத்து தெரிவித்திருந்தார்.