இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடர் இந்தியாவில் கிரிக்கெட் திருவிழாவாக பார்க்கப்படுகிறது. இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற நாட்டு ரசிகர்களும் இந்தத்தொடரை ஆர்வமாக பார்த்துவருகின்றனர். அதற்கு முக்கிய காரணமே, ஒவ்வொரு அணியிலும் நான்கு வெளிநாட்டு வீரர்கள் இடம்பெறுவதுதான். உலகில் மிகவும் பிரபலமான இந்த ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல் - மே மாதத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான வீரர்களைத் தேர்வு செய்வதற்கான ஏலம் வரும் 19ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.
இந்த ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களின் பதிவு நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிவு பெற்றது. தற்போது இந்த ஏலத்தில் 713 இந்திய வீரர்கள், 258 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 971 வீரர்கள் விடப்பட்டுள்ளனர். இந்தியா (754 ), ஆஸ்திரேலியா (55), தென் ஆப்பிரிக்கா (54), இலங்கை (39), வெஸ்ட் இண்டீஸ் (34), நியூசிலாந்து (24), இங்கிலாந்து (22), ஆப்கானிஸ்தான் (19), வங்கதேசம் (6), ஜிம்பாப்வே (3), அமெரிக்கா (1).