தற்போதைய நவீன கிரிக்கெட்டில் ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி, ஜோ ரூட், கேன் வில்லியம்சன் உள்ளிட்ட வீரர்கள் தலைசிறந்த வீரர்களாக திகழ்கின்றனர். இருப்பினும், 90ஸ் கிட்ஸ்கள் பெரும்பாலனோர் அவர்களது சிறு வயதில், கிரிக்கெட்டில் விளையாடிய சச்சின், சேவாக், லாரா, பாண்டிங், ரோட்ஸ் உள்ளிட்ட வீரர்கள்தான் ஆல்டைம் ஃபேவரைட் ப்ளேயர்ஸ்.
கிரிக்கெட்டிலிருந்து இவர்கள் ஓய்வு பெற்றதால், முன்புபோல 90ஸ் கிட்ஸ்கள் தற்போது கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பதில்லை என்பதே நிதர்சனம். 90ஸ் கிட்ஸ்களை மீண்டும் கிரிக்கெட் பக்கம் இழுக்கும் நோக்கில் இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய ஐந்து அணிகளிலிருந்து ஓய்வுபெற்ற வீரர்கள், அடுத்தாண்டு தொடங்கவுள்ள உலக சீரிஸ் டி20 தொடரில் விளையாடவுள்ளனர்.