பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி இன்று (ஜன.15) தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்யத் தீர்மானித்தது.
அதன்படி ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் - மார்கஸ் ஹாரிஸ் இணை தொடக்கம் தந்தது. இதில் டேவிட் வார்னர் ரன் ஏதுமின்றி சிராஜிடமும், மார்கஸ் ஹாரிஸ் ஐந்து ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷர்துல் தாக்கூரிடமும் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த நட்சத்திர வீரர்கள் மார்னஸ் லபுசாக்னே - ஸ்டீவ் ஸ்மித் இணை, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பைத் தடுத்தடுத்து. அதன்பின் 36 ரன்கள் எடுத்திருந்த ஸ்டீவ் ஸ்மித் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியனுக்குத் திரும்பினர்.
பின்னர் லபுசாக்னேவுடன் இணைந்த மேத்யூ வேட் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்னஸ் லபுசாக்னே சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 4ஆவது சதத்தைப் பதிவு செய்தார்.