அகமதாபாத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது.
அதன்படி முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி அஸ்வின், அக்சர் பட்டேல் ஆகியோரது அபார பந்துவீச்சை சமாளிக்கமுடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இருப்பினும் இங்கிலாந்து அணியில் நிலைத்து ஆடிய பென் ஸ்டோக்ஸ் மட்டும் அரைசதம் அடித்து அணியை சரிவிலிருந்து மீட்டார். பின் முதல் நாள் ஆட்டம் முடிவதற்கு முன்னதாக இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்களுக்கு இன்னிங்ஸை முடித்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 55 ரன்களை எடுத்தார். இந்திய அணி தரப்பில் அக்சர் பட்டேல் 4 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.