இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று, ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.
இப்போட்டி முடிவுக்கு பின் பேசிய இங்கிலாந்து கேப்டன் ஈயான் மோர்கன், "இது நிச்சயமாக மிக நெருக்கமான ஆட்டமாக இருந்தது, இந்தியா மிகவும் சிறப்பாக விளையாடியது. இந்தப் போட்டியின் முடிவானது கடைசி ஓவர் வரை சென்றது. இருப்பினும் எங்களது ஒருசில தவறுகளால் போட்டியில் தோற்றோம். இத்தொடர் மூலம் அணியினர் செய்யும் தவறுகளை எங்களால் முடிந்தவரை தவிர்க்க கற்றுகொள்கிறோம்.