தென்ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் முன்னதாக நடைபெற்ற மூன்று போட்டிகளில் தென்ஆப்பிரிக்க அணி இரண்டிலும், இந்திய அணி ஒன்றிலும் வெற்றிபெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு பூனம் ராவத், மிதாலி ராஜ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
இதில் மிதாலி ராஜ் 45 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய பூனம் ராவத் சதமடித்து அசத்தினார். இதையடுத்து களமிறங்கிய ஹர்மன்பிரீத் கவுர் அரைசதமடித்து அணிக்கு உதவினார். இதன் மூலம் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் பூனம் ராவத் 104 ரன்களை குவித்தார்.